ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இன்று(ஜூலை 28) நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமையேற்ற ரகுபிர் நைன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாங்கள் யாரும் காதல் திருமணத்துக்கு எதிராக இல்லை. மாறாக, அதில் பெற்றோர்களின் சம்மதம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறோம்.
ஒரே கோத்ரத்தை சார்ந்தவர்கள் (பாரம்பரியமாக ஒரே வம்சத்தை சார்ந்தவர்கள்) திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும். லிவ்-இன்-உறவு முறைகள், ஒரே பாலின திருமணங்கள் ஆகியவற்றுக்கும் கட்டாயம் தடை விதிக்க வேண்டும்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து விவாதிப்போம். எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து இவ்விவகாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்த உள்ளோம்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.