லெபனானில் உள்ள இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Dinamani2f2024 09 252feuidpxp32fap09252024000118a.jpg
Spread the love

லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசித்துவரும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

லெபனானில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திட இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.

கடந்த sசில நாள்களுக்கு முன்பு இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சிறாா்கள், பெண்கள் உள்பட 564 போ் உயிரிழந்தனா்; 1,645-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் இன்று 51 பேர் உயிரிழந்தனர். 233 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசித்துவரும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

லெபனானில் உள்ள இந்தியர்கள் கட்டாயம் அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களுக்காக லெபனானில் தங்கியிருப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

cons.beirut@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அவசர கால தொலைபேசி எண்ணான +96176860128 என்ற எண்ணிலும் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *