லெபனான்: தொலைத்தொடர்பு சாதனங்களைத் தொடர்ந்து வாக்கி-டாக்கிகள் வெடிப்பு!

Dinamani2f2024 09 182faxgmcpdn2fap24262437978259.jpg
Spread the love

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் செவ்வாய்க்கிழமை(செப்.17) திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்; 2,750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா்.

இது இஸ்ரேலின் அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கைப்பேசிகளை (செல்ஃபோன்கள்) பயன்படுத்தினால் அவற்றைக் கொண்டு ஹிஸ்புல்லா படையினரின் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ஹிஸ்புல்லாக்கள் தங்களிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பேஜா்களைப் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்தி வந்த வாக்கி-டாக்கி தொலைத்தொடர்பு கருவிகளும் இன்று(செப்.18) வெடித்துச் சிதறியுள்ளன. அதில் மூவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *