இந்த நிலையில், ‘லோகா’ திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்து இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, படத்தை தயாரித்துள்ள நடிகர் துல்கர் சல்மானின் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(செப். 2) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’மேற்கண்ட விவகாரத்தில், கர்நாடக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதாக தாங்கள் அறிந்துகொண்டதாகவும், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.