நடிகரும் தெலங்கானா துணை முதல்வருமான பவன் கல்யாண் பாராட்டியதுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என இயக்கிய அனைத்தும் வெற்றிப் படங்களே.
இதையும் படிக்க: மேடை சரிந்து விபத்து..! பிரியங்கா மோகனுக்கு என்னானது?
தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் உபேந்திரா, சௌபின் சாகர், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் நாகர்ஜுனா தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் வெளியாகி லோகேஷ் கனகராஜ் மனம் வருந்தி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகரும் தெலங்கானா துணை முதல்வருமான பவன் கல்யாண் லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசியிருப்பார். அதற்கு தற்போது, இயக்குநர் லோகேஷ் நன்றி தெரிவித்து எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் கூறியதாவது:
உங்களது பாராட்டைக் கேட்பதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது பவன் கல்யாண் சார். எனது படம் உங்களுக்குப் பிடிக்குமென தெரிந்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஊக்கப்படுத்துவது போலவும் இருக்கிறது. மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.
It’s truly an honour to hear these words @PawanKalyan sir ❤️
Elated and grateful to know that you’ve loved my work sir. A big thank you ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 3, 2024
பவன் கல்யாண் கூறியதென்ன?
புதியதாக வந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்கள் மிகவும் பிடித்துள்ளன. அவரது ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் நன்றாக இருக்கிறது. அவரது லியோ, விக்ரம் படங்கள் மிகவும் பிடித்தன என நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பார்.
இதையும் படிக்க: கில்லியின் தீவிர ரசிகை..! விஜய்யுடன் நடிக்க முடியாதெனப் பயந்தேன்..! மமிதா பைஜூ!
அதே நேர்காணலில் யோகி பாபுவை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பார்.
பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) வெளியாகாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, பவன் கல்யாண் பாதியில் நிறுத்தப்பட்ட தனது ஹரி ஹர வீர மல்லு படத்தில் நடித்து வருகிறார்.