நடிகர் மோகன்லாலின் புதிய விளம்பர விடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையே, நடிகர் மம்மூட்டியுடன் புதிய படமொன்றில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், துடரும் படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா இயக்கத்தில் நகை விளம்பரம் ஒன்றில் மோகன்லால் நடித்துள்ளார்.