வக்ஃப் திருத்தச் சட்டம் ஏழைகள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: மோடி

Dinamani2f2025 04 042fsm4fw3l52f20250401040l.jpg
Spread the love

வக்ஃப் திருத்தச் சட்டங்கள் ஏழை முஸ்லிம் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

”சமூக – பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நமது கூட்டுத் தேடலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.

நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.

ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மாநிலங்களவை: வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களிப்பு! அன்புமணி, ஜி.கே. வாசன்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *