வக்ஃப் மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார் பிரதமர்: ஆம் ஆத்மி

Dinamani2f2024 11 092faeml6xr42fani 20241109041539.jpg
Spread the love

வக்ஃப் திருத்த மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார். அனைத்து நாடாளுமன்ற விதிகள் மற்றும் மரபுகளை விட்டுவிட்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விவாதம் நடத்தக்கூட அவர் விரும்பவில்லை.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவை ஒரு நாடகம் என்றும் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டம் குவகாத்தியில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று முதல் நவம்பர் 14 வரை குவகாத்தி, புவனேஸ்வர், கொல்கத்தா, பாட்னா மற்றும் லக்னௌ ஆகிய ஐந்து நகரங்களில் ஆய்வுப் பயணத்தை நடத்துகிறது.

நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் வார இறுதிக்குள் வக்ஃப் மசோதா குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கக் குழு திட்டமிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *