மசோதாவை எதிர்த்து ஹுசைனி கூறியதாவது, “இந்த மசோதா வக்ஃப் வாரிய சொத்துக்களின் மீது புல்டோசரை ஏற்றுவதைப் போலுள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மை வாக்குகள் எதுவும் கிடைக்காததால், தற்போது பாஜக பழிவாங்கும் அரசியல் செய்கிறது.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசக் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அவசர வக்ஃப் வாரியக் கூட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்; கூட்டத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை மத விஷயங்களில் தலையிடுவது என்பது `அரசியலமைப்பு மீதான தாக்குதல்’ என்று கண்டித்தபோதிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.