வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: விசிக தலைவர் திருமாவளவனுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி | Breaking and Live Updates

Spread the love

Last Updated:

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்த திருமாவளவனுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

News18
News18

வக்பு சட்ட திருந்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், குரல் கொடுத்த விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் வக்பு சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இது தொடர்பாக இரண்டு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது.

அப்போது மக்களவையில் நடந்த விவாதத்தில் விசிக எம்.பி. திருமாவளவன் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்கு மனித நேய ஜனநாயக கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹாருன் ரஷீத் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இம்மசோதாவை மக்களவையிலும்,  மாநிலங்களவையிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்ததிற்கு எதிராக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலுவாக களமாடி வருகின்றது.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆதரவாக தொடர்ந்து போராடும் விசிக நிறுவனர் – தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து, “நபிகள் நாயகம் வரலாறு” புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தேன். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *