சென்னை: வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது.
பின்னர் புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் அக்.,20 (இன்று) ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்.,21 (நாளை) ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்.,22 ஆம் தேதி மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்.,23 ஆம் தேதி மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 இலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல பகுதிகள் மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே SS கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்.,24 ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே B5 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: அக்.,20 (இன்று) ஆம் தேதி மத்தியகிழக்கு அரபிக்கடல், மத்தியமேற்கு அரபிக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே S5 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக்.,21 (நாளை) ஆம் தேதி மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.