Last Updated:
வன்முறை சம்பவங்களால் சூறையாடப்படுவதை தடுக்க பல வங்கிகள் வங்கதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்க தேசத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டத்தை தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக மாறியதால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. ஆனாலும், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் குறையாத நிலையில், பணம் இன்றி பல வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் காலியாகி உள்ளன. இதனால் அன்றாட தேவைகளுக்கு அல்லல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வன்முறை சம்பவங்களால் சூறையாடப்படுவதை தடுக்க பல வங்கிகள் வங்கதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏடிஎம்களுக்கு பணத்தை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பு தரும் காவலர்கள் பலரும் சொந்த பாதுகாப்பு கருதி பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், வங்கிகளில் போதிய பணம் இருந்தும் அவற்றை ஏடிஎம்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது வங்கி ஊழியர்களின் விளக்கமாக உள்ளது.
வங்கிக் கிளைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் எந்த பணத் தட்டுப்பாடும் இல்லை என்றும் தொலைதூர ஏடிஎம்களே இதுபோன்ற சிக்கலை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
August 08, 2024 6:14 PM IST
