வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாக்காவின் வடக்கே தோர் கிராமத்தில் மஹாபாக்ய லட்சுமிநாராயண் கோயில் உள்ளது. இக்கோயில் மீது வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து கோயிலில் உள்ள சிலைகளுக்கும் தீவைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோயிலின் மேற்பார்வையாளர் பாபுல் கோஷ் கூறியதாவது, லட்சுமிநாராயண் கோயில் எங்கள் குலதெய்வக் கோவில். நேற்று இரவு, வீட்டின் பின்புறம் புகுந்த மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி சிலைகளுக்கு தீ வைத்தனர்.
விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!
இதில் சிலைகள் எரிந்து சேதமடைந்தன. எங்கள் சப்தம் கேட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
முன்புறம் சிசிடிவி இருப்பதை அறிந்த அவர்கள் பின்பக்கத்தில் இருந்து வந்துள்ளனர். இருப்பினும் சிசிடிவியில் எந்த காட்சியும் கிடைக்கவில்லை என்றார். இதனிடையே கோஷ் தனது கோயிலின் எரிந்த பகுதிகளைக் காட்டினார்.
வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.