வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் 20,980 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 1,262 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.