கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இரு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் இந்துக்களைக் குறி வைப்பது மூலம் அவர்கள் இந்தியா மீதான கோபத்தைத் தான் வெளிப்படுத்துகின்றனர்.
“இது மிக கவலைக்குரியது’ என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நடக்கும் இந்தச் சம்பவம் இந்தியாவில் மெல்ல மெல்ல எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அங்கே இந்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து இந்தியாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தச் சம்பவம் நிச்சயம் மேற்கு வங்கத்தில் பெரிதாக எதிரொலிக்கும்.
இந்தியாவில், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாவதற்கு முன்பு, இந்திய அரசு இதை தடுக்க எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.