வங்கதேசம் – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

Dinamani2f2024 08 062fdgls9msn2fgkdt9k2bcaangrq.jpg
Spread the love

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. வன்முறை அதிகரித்ததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. வங்கதேசத்தில் தற்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில், முன்கூட்டியே வங்கதேச வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு வங்கதேசம் தரப்பில் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *