வங்கதேச விமானப்படைத் தளம் மீது தாக்குதல்: ஒருவர் பலி

Dinamani2f2025 02 242f92oyo83l2fjj.png
Spread the love

வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் கும்பல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.

வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது அருகிலுள்ள சமிதிபாரா பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஷிஹாப் கபீர் நஹித் (25) என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க | கால்களில் அடிக்கடி வலி, வீக்கம் ஏற்படுகிறதா? மருத்துவர் என்ன சொல்கிறார்?

இதனால் உள்ளூர் கும்பலுக்கும் வங்கதேச விமானப்படைக்கும் இடைய மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேச விமானப்படை முயற்சித்து வருகிறது.

தாக்குதலுக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *