சென்டரல் வங்கியில் காலியாக உள்ள இளநிலை மேலாண்மை கிரேடு பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Management Grade
காலியிடங்கள்: 266
சம்பளம்: மாதம் ரூ.48,480
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2024 தேதியின்படி 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோடை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.