இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளான ஒர் ஹானெர், இபிம் மற்றும் கெவிம் ஆகிய இடங்களின் மீதும் இன்று (எப்.1) காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனை தாங்கள் தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவப் படைகள் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் அப்பகுதி முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காஸாவின் வடக்குப் பகுதிகளிலுள்ள பெயித் ஹனோன், பெயித் லஹியா மற்றும் ஷேக் ஜயித் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி காஸா நகரத்திலுள்ள கூராங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவப் படையின் அரேபிய செய்தி தொடர்பாளர் அவிசய் அட்ராயி தெரிவித்துள்ளார்.