வட கொரியா தேர்தல்: 99.93% வாக்கில் கிம் ஜாங் உன் வெற்றி | Kim Jong Un Wins Big, But 0.07% Vote Shocks North Korea

Spread the love

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட “ஸ்டைலில்’ வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்… நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆனால், அதுவும் கொஞ்சம் தனி ஸ்டைலில்.

பிற நாடுகளின் தேர்தல்களில் தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. ஆனால், வட கொரியாவில் ‘இவர்’ தான் தலைவர் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தல் நடக்கிறது அல்லது நடத்தப்படுகிறது. அவ்வளவு தான்.

வட கொரியாவின் நாடாளுமன்றத்தின் பெயர் ‘சுப்ரீம் மக்கள் சட்டமன்றம்’. இந்தச் மன்றத்திற்கான 15-வது தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றுள்ளது.

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

வாக்குகள்: வெற்றியும், தோல்வியும்!

அந்தத் தேர்தலில் இப்போது வட கொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் 99.93 சதவிகித வாக்குகளில்.

மீதம் உள்ள வாக்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வெளிநாடு சென்றதாலும், கடலில் பணி செய்துகொண்டிருந்ததாலும் வாக்களிக்கவில்லை. இன்னும் சில சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *