தேவையானவை:
மெல்லிய மைதா சப்பாத்தி – 4 (அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்)
வடா பாவுக்குச் செய்த உருளைக்கிழங்கு ஸ்டப்பிங் – அரை கப் (பார்க்க அடுத்த பக்கம்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலா – அரை டீஸ்பூன் + இரண்டு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – கால் கப்
மயோனைஸ் – இரண்டு டீஸ்பூன்
தக்காளி கெட்சப் – இரண்டு டீஸ்பூன்
சில்லி சாஸ் – இரண்டு டீஸ்பூன்
வெண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை:
வடா பாவுக்குச் செய்த உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்குடன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து இக்கலவையை சிறிது சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு சிறிய பவுலில் மயோனைஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ் ஆகிய மூன்றையும் ஒன்று சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மைதா சப்பாத்திகளின் இருபுறமும் வெண்ணெய் தடவி தவாவில் சுட்டு எடுக்கவும். சுட்ட சப்பாத்தியின் மேல், கெட்சப் கலவையை தடவவும். சப்பாத்தியின் நடுவில் இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையைவைத்து சிறிது அழுத்தி விடவும். பின்னர் அதன்மேலே நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், சாட் மசாலா தூவி இறுக்கமாக உருட்டவும். கீழ்பாகத்தைச் சிறிது மடித்து விட்டு, ஃப்ராங்கியை அலுமினியம் ஃபாயில் அல்லது சாண்ட்விச் பேப்பரில் சுருட்டிப் பரிமாறவும்.