பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகனாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட வணங்கான் திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படிக்க: நிறம் மாறும் உலகில்… டிரைலர் வெளியானது!
Strength, emotions & power-packed storytelling!#Vanangaan streaming wordwide from Feb 21 on #Tentkotta! Don't miss @arunvijayno1 in this gripping masterpiece by @IyakkunarBala @gvprakash @sureshkamatchi @vhouseofficial@roshiniprakash_ @iam_ridhaa @thondankani… pic.twitter.com/Vthxd5Mjgq
— Tentkotta (@Tentkotta) February 20, 2025
வணங்கான் திரைப்படம் ஜன.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், வணங்கான் திரைப்படம் நாளை(பிப். 21) டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.