வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப். 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்கிறது | ChatGPT training class for businessmen and entrepreneurs on April 3 in chennai

1356336.jpg
Spread the love

சென்னை: வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘சாட்ஜிபிடி’ பயிற்சி வகுப்பு, வரும் ஏப்.3-ம் தேதி சென்னை கிண்டியில் நடத்தப்படுகிறது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு ‘சாட்ஜிபிடி’யை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் வகையிலான ஒருநாள் பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் ஏப்.3-ம் தேதி (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது.

சாட்ஜிபிடியில் வணிக தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான தரவுகளை (ப்ராம்ப்ட்டுகள்) எழுதுதல், சாட்ஜிபிடியின் உதவியுடன் இலக்குகளை சரியான வழியில் அமைத்தல், கன்டெண்ட் உருவாக்குதல், வாடிக்கையாளர்கள் உடனான உரையாடலை மேம்படுத்த ஏஐ கருவிகளை பயன்படுத்துதல், வணிக உத்திகளை துல்லியமாக கண்காணித்தல், தொழில்முனைவோர் சவால்களுக்கு சாட்ஜிபிடி மூலம் தீர்வு காணுதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி தரவுகளுடன் கூடிய மின்புத்தகம், வழிகாட்டுதல்கள், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்திலும், 9360221280 மற்றும் 9543773337 என்ற செல்போன் எண்களையும் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *