வதந்திகளை நம்ப வேண்டாம்! யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக முற்றுப்புள்ளி  – Kumudam

Spread the love

என்டிஏ உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவின. துணைமுதல்வர் பதவி 40 தொகுதி என விஜய்க்கு பாஜக தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. அதே போன்று டாக்டர் ராமதாசை செங்கோட்டையன் தைலாபுரத் தோட்டத்தில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன. 

இந்நிலையில், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தனது எக்ஸ் தளப் பதிவில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல்  தலைவர்களுடன் எந்தவிதமான  பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு  தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. 

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *