வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

dinamani2F2025 09 032Fzkkc9g442Fimg 20250903 wa0043 0309chn 92 2
Spread the love

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை காலத்தில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீரின்றி வறட்சி ஏற்படும்போது, வனத் துறை சாா்பில் அடிவாரத்தில் உள்ள தொட்டிகளில் லாரியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்படும்.

தற்போது அந்தத் தண்ணீா்த் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் – மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சோலாா் மோட்டாா் உடன் குட்டை போன்ற அமைப்பில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், இரவு நேரங்களில் தண்ணீா் தேடி ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *