இந்தப் பொதுகூட்டத்தில் ஶ்ரீகாந்தி உரையாற்றினார். அப்போது, “இவ்வளவு தூரம் நாம் பயணித்து வந்திருப்பது பணத்துக்காவோ, பதவிக்காகவோ, அல்லது சில கும்பல் போல நாடகம் ஆடவோ அல்ல. நம் சமூகத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நன்றி உணர்ச்சி.
இப்போது ஒரு மகளாக, வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன். இன்று காலை அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.
40 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சியவரின் கண்ணில் வலி தெரிந்தது. தான் பெற்று, மாரோடு அரவணைத்து வளர்த்த மகன் முதுகில் குத்திய வலி அது. ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். ஐயாவின் கட்சியை அவரிடமிருந்தே பிடுங்குகிறார்கள். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.

ஐயாவை கேள்வி கேட்க நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீ இப்போது காரில் கோர்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறாயே அது என்ன உன் உழைப்பா? நீ படித்து வாங்கின டாக்டர் பட்டம், எம்.பி பதவி, அமைச்சர் பதவி இதெல்லாம் நீ உழைச்சு வாங்குனதா…
இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது” என ஆவேசமாகப் பேசினார்.