கே.பி. சர்மா ஓலி முதலில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெளியே வராத அவர், இன்று அவரது கட்சி விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)யின் மாணவர் பிரிவான ராஷ்ட்ரிய யுவ சங்கம், பக்தபூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஓலி கலந்துகொண்டுள்ளார்.
அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.