வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

Dinamani2f2024 11 282fmict2sqr2fpriyanka1a.jpg
Spread the love

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக இன்று(நவ. 28) பதவியேற்றார். பிரியங்கா காந்திக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியைத் தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கட்சியின் பொதுச் செயலஎ பிரியங்கா காந்தி, 4.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் நிலையில், இன்று வயநாடு தொகுதி எம்பியாக பதிவியேற்றார்.

பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாகப் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *