கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பதிவு செய்த ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக தான் பதவியேற்கப் போவதில்லை என அறிவித்தார்.
இதையடுத்து, வயநாடு மக்களவைத் தொகுதியில் நவ. 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் இன்று(அக்.15) மாலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.