வயநாடு நிலச்சரிவு: 350-ஐ தாண்டியது உயிர்ப்பலி!

Dinamani2f2024 082f227c7653 D5f3 4579 Be99 57ccdd8cf5842fpti08 03 2024 000295b.jpg
Spread the love

வயநாடு மாவட்டத்தில் மீட்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் 5-ஆவது நாளான சனிக்கிழமை(ஆக. 3) தேடுதல் பணியில், பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 350-ஐ கடந்துவிட்ட நிலையில், மண்ணுக்கு அடியில் மனிதர்கள் இருப்பதைக் கண்டறிய ஐபோட் அமைப்பைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயிரிழந்தவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் தேடுதல் பணியை மீட்புக் குழுவினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தமிழகத்தை சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், தமிழகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிகப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் சனிக்கிழமை(ஆக. 3) நிலவரப்படி, 357 பேர் உயிரிழந்திருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.

மண்ணில் புதையுண்டவா்களை மீட்கும் பணியிலும், சாலியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *