வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், முண்டகை, சூரல் மலையில் பாதிப்புகளை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே பிரதான பணி. மாயமானவர்கள் தொடர்பான விபரங்கள் சரியாக இன்னும் கிடைக்கவில்லை. தேடுதல், மீட்பு பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவை என கேரள அரசு கேட்டால், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது.