வரம்பின்றி வந்துகொண்டே இருக்கும் வங்கதேசத்தினர்..! – திருப்பூருக்கு படையெடுப்பது ஏன்? | Bangladeshis infiltrating Tirupur was explained

1350395.jpg
Spread the love

“உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் அந்நாட்டினர் அசாம் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள்” என அண்மையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியளித்திருந்தார். அவர் சொன்னது போலவே, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் ஜவுளி தொழிலை நம்பி தமிழகத்துக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு குறைவான கூலி கொடுத்தால் போதும் என்பதால் ஒரு சில நிறுவனங்கள் இவர்களின் வருகையை ஊக்குவிப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் திருப்​பூரில் முறைகேடாக தங்கி​யிருந்த வங்கதேசத்​தினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். திருப்​பூரில் மட்டுமல்லாது கோவை, கரூர் பகுதி​களிலும் அண்டை மாநிலமான கேரளா​விலும் வங்கதேசத்​தினரின் ஊடுரு​வல்கள் சகஜமாகி​விட்​ட​தாகச் சொல்கிறார்கள் ஐபி அதிகாரிகள்.

இதுகுறித்து நம்மிடம் கூடுதல் தகவல்​களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், “வங்கதேம் – இந்திய எல்லைக் கோடானது மிக நீளமானது. மேற்கு​வங்கம், அசாம், திரிபுரா, மேகாலயா என 4 மாநிலங்கள் இந்த எல்லைக் கோட்டில் வருகின்றன.

இதனால் ஊடுரு​வல்​காரர்​களைக் கண்காணிப்​பதும் கஷ்டமான ஒன்றாக உள்ளது. வேலி போடப்பட்ட இடத்தில் இரண்டு பக்கமும் மரப்படிக்​கட்டுகள் கொண்ட சரக்கு வாகனங்களை நிறுத்தி எளிதாக எல்லையைக் கடந்து​விடு​கிறார்கள். இவர்களை இப்படி கடத்தி விடுவதற்​கென்றே எல்லையோர கிராமங்​களில் ‘தலால்’ என்றழைக்​கப்​படும் ஏஜென்​டுகள் ஏராளமானோர் உள்ளனர். இந்திய பண மதிப்பில் ரூ. 10 ஆயிரமும், வங்க தேச பணத்தில் 15 ஆயிரம் தாகாவும் இருந்தால் இவர்கள் பத்திரமாக நாடுகடத்தி விடுவார்கள்.

இப்படி எல்லை தாண்டு​கிறவர்களை இந்தியாவின் சில்சர், கவுகாத்தி ரயில் நிலையங்கள் வரைக்கும் கொண்டு​வந்து விடுவது தலால்​களின் பொறுப்பு. போலி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை தயாரித்துக் கொடுப்​ப​திலும் தலால்​களின் கைங்கர்யம் உண்டு.

முன்னதாக ஊருவிய​வர்கள் மூலம் தலால்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமே பணம் செலுத்தி, மற்றவர்​களும் வரிசைகட்டி வந்து கொண்டே இருக்​கிறார்கள். திருப்பூர் உள்ளிட்ட பகுதி​களுக்கு வருபவர்கள் முதலில் சிறு பனியன் கம்பெனிகளில் வேலை தேடிக் கொள்கிறார்கள். முதல் ஆறு மாதங்​களுக்கு நிறுவனத்தை மாற்றாமல் ஒரே நிறுவனத்தில் பணி செய்வார்கள். அதன் பிறகு போலி ஆவணங்களை தயார் செய்து கொண்டு பெரிய நிறுவனங்​களில் வேலைகளில் செட்டிலாகி​விடு​கிறார்கள்.

இருசக்கர வாகனங்​களைப் பயன்படுத்​தினால் போலீஸ் சோதனையில் சிக்கி​விடுவோம் என்பதால் இவர்கள் பெரும்​பாலும் நடந்தே தான் செல்கிறார்கள். தொலைதூரங்​களுக்கு பேருந்தில் பயணிக்​கிறார்கள். ஜவுளி வேலை தெரியாதவர்கள் கட்டிட வேலைக்கும் போகிறார்கள். ஆனால், எந்த வேலைக்குப் போனாலும் கூட்டம் கூட்ட​மாகத்தான் போகிறார்கள். வசிப்​பதும் அப்படித்​தான். வங்கதேசத்தை விட இங்கு இரண்டு மடங்கு ஊதியம் கிடைப்​பதும் ஊடுரு​வல்​காரர்கள் தமிழகத்​துக்கு வருவதற்கு முக்கிய காரணம்.

நம்முடைய ஜிபே போல், வங்கதேசத்தில் பிகேஷ் உண்டு. இங்கு சம்பா​திக்கும் பணத்தை தலால்கள் சொல்லும் எல்லையில் உள்ள இந்திய கிராமத்தில் வசிப்​பவர்​களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு பிகேஷ் மூலம், சம்பந்​தப்​பட்​ட​வரின் குடும்பத்​தினருக்கு மொத்தப் பணத்தையும் அனுப்​பி​விடு​கிறார்கள்.

வங்கதேச எல்லை​யானது திறந்​தவெளியாக இருப்​பதால் தினமும் இப்படியான ஊடுரு​வல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படி வருபவர்​களில் பலர் இங்குள்ள பெண்களை திருமணம் செய்து செட்டிலாகியும் விடுகிறார்கள். சொந்த நாட்டைவிட இங்கு வாழ்க்கைத் தரம், கல்வி, வருமானம் திருப்​தியாக இருப்​பதால் இங்கு வந்து செட்டிலாகும் யாரும் மீண்டும் தாய்நாடு திரும்ப நினைப்பதே இல்லை. எதிர்​பாராத விதமாக இவர்கள் போலீஸ் சோதனையில் கைதாகும் போது, இவர்களின் மனைவி​மார்கள் கைக்குழந்தை​களுடன் போலீஸ் ஸ்டேஷனில் வந்து நிற்கும் அவலங்​களும் நடக்கின்றன.

இதையெல்லாம் தடுப்​ப​தற்கு ஒரே வழி, வங்கதேசத்​திலிருந்து வேலை தேடி வருபவர்​களுக்கு எம்ளாய்​மென்ட் விசா கொடுத்து சட்டப்​பூர்வமாக அவர்களை இந்தியா​வுக்குள் அனுமதிக்​கலாம். அதேபோல் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்​களில் வாரந்​தோறும் சோதனை நடத்தினால் ஊடுரு​வலைக் கட்டுக்குள் ​கொண்டுவர ​முடி​யும்” என்​றார்​கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *