சர்வதேச டாலருக்கு நிகர இந்திய ரூபாயின் மதிப்பு பொறுத்து, தங்கம், வெள்ளி விலையில் தினந்தோறும் மாற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சவரன் ரூ. 35 ஆயிரம் விற்கப்பட்டது. தற்போது சவரன் ரூ 1 லட்சம் வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.292க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ. 2,92,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.880 விலை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ 1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ 110 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, வெள்ளி கிராமுக்கு ரூ.15 விலை உயர்ந்து, கிராம் ரூ.307-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.15 ஆயிரம் உயர்ந்து, கிலோ வெள்ளி ரூ.3,07,000-க்கு விற்பனை ஆகிறது.
