வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

Dinamani2f2024 09 022f7elrl5zb2fnifit.jpg
Spread the love

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.

டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய சந்தைகளில் பலவீனமான போக்கு பிரதிபலித்தது. இதற்கிடையில் உள்ளூரில் ஆட்டோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் கடும் அழுத்தத்தில் இருந்ததால் பெஞ்ச்மார்க் குறியீடுகள் சரிந்து முடிந்தது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 420.81 புள்ளிகள் சரிந்து 77,185.62 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 191.51 புள்ளிகள் சரிந்து 77,414.92 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 72.60 புள்ளிகள் குறைந்து 23,519.35 புள்ளிகளாக நிலைபெற்றது.

மத்திய நேர வர்த்தகத்தில் எஃப்எம்சிஜி மற்றும் ஆயில் & கேஸ் தவிர்த்து அனைத்து துறைகளிலும் விற்பனை தெடர்ந்ததால், நிஃப்டி 23,450 புள்ளிகள் வர்த்தகமான நிலையில், வர்த்தக நேர முடிவில் இது 23,500-க்கும் அதிகமாக முடிந்தது.

2024-25 நிதியாண்டில், சென்செக்ஸ் 3,763.57 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 1,192.45 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ள முதல் 50 குறியீடுகள் தலா 0.5 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.

சென்செக்ஸ் பேக்கிலிருந்து இண்டஸ் இண்ட் வங்கி 3.50 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது, அதைத் தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது. ஹெச்சிஎல் டெக், மாருதி, இன்போசிஸ், சோமேட்டோ, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்து முடிந்தது.

கோடக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், நெஸ்லே மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் விலை உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் வெகுவாக சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.11,111.25 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.16 டாலராக உள்ளது.

ரம்ஜான் முன்னிட்டு வரும் மார்ச் 31 (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விலை உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *