பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.
நாள்தோறும் பலரும் பார்க்கும் முக்கிய தலைப்புகளில் தங்கம், வெள்ளி விலை நிலவரமும் ஒன்று. வாங்குகிறோமோ இல்லையோ, தங்கம் விலை ஏறினால் கவலைப்படுவதும், குறைந்தால் மகிழ்ச்சி அடைவதும் மக்களின் மனப்பான்மையாக மாறிவிட்டது.
இந்த நிலையில்தான் செயற்கை தங்கம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள புத்தாக்க நிறுவனமான மாரதான் ஃபியூஷன், பாதரசத்தைக் கொண்டு செயற்கை தங்கம் உருவாக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.
அதாவது, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மராத்தான் ஃபியூஷன் மிகவும் வித்தியாசமான நுட்பத்தை முன்மொழிகிறது.
அணுக்கரு இணைவு உலையில் உள்ள நியூட்ரான் துகள்களிலிருந்து வரும் கதிரியக்கத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு வடிவத்தில் உள்ள பாதரசத்தை மற்றொரு வடிவமாக மாற்றுவதன் மூலம் பாதரசம்-197 என்பதை உருவாக்கலாம்.
இது பின்னர் நிலையான தங்க வடிவுக்கு சிதைக்கப்படும். இதுதான். தங்கம்-197. இந்த துகள் சிதைவு செயல்முறையில் ஒரு துணை அணு துகள் தானாகவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலகுவான துகள்களாக மாறுகிறது.
மாரத்தான் ஃபியூஷனைச் சேர்ந்த ஒரு குழு கூறுவது என்னவென்றால், ஒரு இணைவு மின் நிலையம், ஒரு ஆண்டு முழுவதும் இயக்கப்பட்டால் ஒரு ஜிகாவாட் வெப்ப மின்சாரத்தின் மூலம் பல டன் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பப்படுவதாகக் கூறுகிறது.