தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மீனாட்சி சவுத்ரி, தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் வரிசைகட்டி படங்கள் நடித்து வருகிறார்.
வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் ஹைதராபாத்தில் உள்ள இவருடைய வீட்டின் மதிப்பு ரூ. 7 கோடி இருக்கும் என்கின்றனர். விளம்பரங்கள் மூலம் இவர் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது வருங்கால கணவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் குறித்து மீனாட்சி சவுத்ரி பேசியது வைரலாகி இருக்கிறது. அதில் அவர், “என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.
மீனாட்சி சவுத்ரி சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் நெட்டிசன்கள் புருஷனுக்கு பதிலாக வேலைகாரன் திருமணம் செய்து கொள்ளலாம் என கிண்டல் செய்து வருகின்றனர்.
