வருமான வரி ரீ-ஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை எனில், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|How to|Still No Income Tax Refund? Here’s How to Find Out Why

Spread the love

பொதுவாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த 4-5 வாரங்களில், வருமான வரி ரீஃபண்ட் கிடைத்துவிடும்.

ஆனால், சிலருக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

eportal.incometax.gov.in வலைதளத்திற்குள் செல்லவும்.

உங்களுடைய பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை வைத்து “Log in‘ செய்யவும்.

ஹோம் பேஜில் இருக்கும் ‘e-File‘-ஐ கிளிக் செய்யவும்.

வருமான வரி

வருமான வரி

Income Tax Returns > View Filed Returns என அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கவும்.

இப்போது வரும் பக்கத்தில், எந்த ஃபைலிங்கிற்கான ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்ய வேண்டுமோ, அதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் ரீஃபண்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவும் அதே பிராசஸ் தான்.

வருமான வரி ரீஃபண்ட் ஏன் தாமதமாகலாம்?

வங்கிக் கணக்கு தவறாக பதிவு செய்திருந்தால், ரீஃபண்டில் பிரச்னை ஏற்படலாம். அதை செக் செய்யுங்கள்.

ஆதார் – பான் இணைப்பில் தவறு இருந்தாலும், ரீஃபண்டில் சிக்கல் ஏற்படும்.

தவறாக எதாவது பதிவு செய்திருந்தாலோ, கூடுதல் ஆவணம் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டுமா என்பதை செக் செய்யுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *