வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி: பெங்களூரு புகழேந்தி கருத்து | competition will be between DMK and TVK: Bengaluru Pugazhendi

1374113
Spread the love

சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்​களூரு புகழேந்தி நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அண்​ணா​மலைக்கு தனி செல்​வாக்கு இருந்​தது. ஆனால், தற்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று அவர் பேசுகிறார். ஏன் இப்​படித் தடு​மாறி​விட்​டார் என்று தெரிய​வில்​லை.

வடக்​கில் இருந்து 100 தலை​வர்​கள் தமிழகம் வந்​தா​லும், இங்கு ஆட்சி அமைக்க முடி​யாது. விஜய் மாநாட்​டில் லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் கூடி​யிருந்​தனர். இதை யாராலும் மறுக்க முடி​யாது. எங்​களுக்​கும், அதி​முக​வுக்​கும்​தான் போட்டி என்று திமுக அமைச்​சர் ஒரு​வர்கூறுகிறார். ஆனால், தற்​போது சீமானுக்​கும், அதி​முக​வுக்கும்தான் போட்​டி. அதே​போல, வரும் தேர்​தலில் திமுக​வுக்​கும், தவெகவுக்​கும் தான் போட்டி.

வெளி​யில் வராமல் அரசி​யல் செய்ய முடி​யாது. விஜய்க்கு என்ன தெரி​யும் என்று கேட்​கிறார்​கள்? கட்சி தொடங்​கிய 7 மாதங்​களில் என்​டிஆர் ஆட்சி அமைத்​தார். அரசி​யலில் எது​வும் நடக்​கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *