மிகப்பெரிய ரசிகன்
“ஈரோட்டில 22 வருசமா டீ கடை நடத்தி வரேன். சில்க் ஸ்மிதாவின் மிகப்பெரிய ரசிகன் நான்.
வருஷம் வருஷம் அவுங்க பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவேன்.
சினிமாவில கவர்ச்சியா மட்டுமே காட்டின அவுங்களோட உண்மையான குணத்தையும் வாழ்க்கையில அவுங்க கஷ்டப்பட்ட சில விஷயங்களையும் கேள்விப்பட்ட பிறகு மிகப்பெரிய ரசிகராகிட்டேன்.

சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டம்
1992-ல வெளியான பாக்யராஜ் சாரோட “ராசுக்குட்டி’ படம் ஈரோட்டில தான் எடுத்தாங்க.
அப்போ அந்த சூட்டிங் ஸ்பாட்டில வேலை பார்த்தேன். அந்த சமயத்துல போண்டா மணி உள்ளிட்ட சிலர்கிட்ட சில்க் ஸ்மிதாவை பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.
“நல்ல மனசு கொண்டவுங்க , நிறைய பேருக்கு உதவியிருக்காங்க, வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க” அப்படி’ன்னு நிறைய சொன்னாங்க.