பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் பிஜிடி தொடரின் 3ஆவது போட்டியில் கே.எல்.ராகுலை ஆட்டமிழக்க செய்த ஸ்மித்தின் கேட்ச் குறித்து ஆலன் பார்டர் புகழ்ந்து பேசியுள்ளார்.
1-1 என சமநிலையில் இருக்கும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தப் போட்டி முக்கியமானது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 445க்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி 4ஆம் நாள் முடிவில் 252/9 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 86 ரன்கள் குவித்தார். 33 ரன்களில் வந்த எளிமையான ராகுல் கேட்சை ஸ்மித் 4ஆம் நாள் தொடக்கத்தில் தவறவிட்டார். பின்னர், லயன் ஓவரில் கடினமான கேட்ச்சை திறமையாக பிடித்து அசத்தினார்.
112 டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 189 கேட்ச்களுடன் ஆஸ்திரேலியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங் 169 போட்டிகளில் 196 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த கேட்ச் குறித்து வர்ணனையாளர்கள் பலரும் புகழ்ந்து பேசினார்கள்.
இஷா குகா
பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு மன்னிப்பு கேட்ட இஷா குகா, “எளிமையான கேட்சை விட்ட ஸ்மித் தற்போது கடினமான கேட்சை அழகாக பிடித்துள்ளார்” எனக் கூறினார்.
ரவி சாஸ்திரி
இது பிரமிக்கச் செய்கிற கேட்ச். இது தன்னியல்பான கேட்ச். முற்றிலும் சிறப்பான கேட்ச். தனது வலது பக்கத்தில் தாவிப் பிடித்தார்.
ராகுல் அற்புதமான இன்னிங்ஸை இப்படிதான் முடிவுக்குக் கொண்டுவரமுடியும். 51 ரன்களுக்கு பிறகு விட்டதை பிடித்துவிட்டார் என்றார்.
ஆலன் பார்டர்
இது எவ்வளவு நல்ல கேட்ச் என என்னால் கூறமுடியாது. பந்தினை பிடிக்க குறைவான நேரம் மட்டுமே இருந்தது. தனது வலது பக்கத்தில் டைவ் அடித்து பிடித்தார்.
முதல் பந்தில் கேட்ச் தவறவிட்டார். நாம் அதைப் பற்றி பேசினோம். பொதுவாக கேட்சை தவறவிடாதவர் ஸ்டீவ் ஸ்மித். ராகுல் சிறப்பான ஆட்டத்தை இந்த கேட்ச் முடிவுக்குக் கொண்டு வந்தது.
பந்து வீசியதுமே ஸ்மித் வலதுபுறம் நகரத் தொடங்கிவிட்டார். பேட்டில் பட்டதும் இன்னும் நகர்ந்து பசை தடவியதுபோல் ஒற்றைக் கையில் பிடித்தார்.
இதுமாதிரி அற்புதமான கேட்ச்களை ஸ்மித் அடிக்கடி பிடித்துள்ளார். இதுமாதிரி அசாதாரணமான பல கேட்ச்சுகளை ஸ்மித் பிடித்துள்ளார். புத்திசாலிதனமான கேட்ச்.
பேட்டில் இருந்து ஸ்மித் மிக அருகிலேயே இருந்தார். பேட்டில் பட்டு வேகமாக வந்தது. தனது விழிப்புணர்வினால் நகர்ந்து பந்தினை பிடித்தது மிகவும் புத்திசாலித்தனமான கேட்ச் என்றார்.