“வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”-வேதாந்தா குழுமத் தலைவரின் மகன் மரணம் – யார் இந்த அக்னிவேஷ்? |Who Was Agnivesh Agarwal, Vedanta Chairman’s Son Who Died In US

Spread the love

வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது…

தன்னுடைய மகனின் இறப்பைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்பு மகன் அக்னிவேஷ் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். 49 வயதுதான் ஆகிறது. திடீர் மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

பெற்றோருக்கு, தங்கள் சொந்தக் குழந்தையின் மரணத்தால் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு மகன் ஒரு தந்தைக்கு முன்பு உலகை விட்டுச் செல்லக் கூடாது. இந்த இழப்பு எங்களை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உடைத்துவிட்டது” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மோடி இரங்கல்

மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், “அக்னிவேஷ் அகர்வால் அவர்கள் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அளிக்கிறது. அனில் அகர்வாலின் துயரத்தின் ஆழம் தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் குடும்பம் இந்த கடினமான நேரத்தில் தொடர்ந்து வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *