வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள் வரை
வள்ளலார் கந்தகோட்டத்து முருகனை தரிசித்துப் பாடியுள்ள தெய்வமணிமாலை 31 பாடல்களும், கந்தர் சரணப் பத்து பாடல்களும் பிரசித்திபெற்றவை. `ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று தொடங்கும் பாடல் இந்த ஆலயத்தில் வேண்டிப்பாடியதுதான்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத்தமிழ், கலம்பகம், திரிபந்தாதி, சந்தத் திருப்புகழ், சண்முகர் வகுப்பு, வேல் வகுப்பு, திருவருள் வினோத வகுப்பு, பதிற்றுப்பத்தந்தாதி, விமான மிசை கண்ட பதிகம், சண்முக தரிசன பதிகம், சிவகுரு தரிசன பதிகம் மற்றும் சில பதிகங்களுடன் ஏறக்குறைய 750 பாடல்களைப் பாடியுள்ளார்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்… கந்தசாமிப்பா, கந்தர் இரட்டை மணிமாலை, கந்தர் ஒருபா ஒரு பஃது, கந்தர் திரு அவதாரம், கந்தர் நான்மணிமாலை, கந்தவேள் வேட்கை, சென்னைசேய முதலான பாடல்களை அருளிச் செய்துள்ளார்.
குளத்தூர் வரகவி கிருஷ்ணப்ப செட்டியார்… செல்வக்கந்தர் தலப் புராணம், வேதாந்த விருத்தம், கந்தர் திருப்புகழ், கந்தர் கீர்த்தனை முதலானவற்றை இயற்றியுள்ளார்.
இங்கே மாதாந்திர கிருத்திகை, சஷ்டி வழிபாடுகள், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தை பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய விழாவைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.