இந்நிலையில், இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி பாஜவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இச்சட்டத்தை ஆதரித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தனி அமர்வு விசாரித்து வந்தது.
இருதரப்பு வாதங்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஞானவாபி மசூதி, சம்பல் ஜாமா மசூதிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை எழுந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக அல்லது அதனை ஆய்வு செய்வது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள கீழமை மற்றும் உயர்நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை வேறு எந்த நீதிமன்றமும் புதிய வழக்கை பதிவு செய்யக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!