தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்கக் கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம். பல வாகன ஓட்டிகள் காருக்குள் ‘ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியைக் கடக்கும்போது மட்டும் அதைக் கையில் எடுத்து முன்பக்கக் கண்ணாடியில் காட்டுகின்றனா். இதனால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம்
