“வாக்களித்தால் தான் நிதி என்பதா ஜனநாயகம்?” – பட்னாவிஸ் பேச்சுக்கு பி.டி.ஆர் பதிலடி | “Is it ‘Funding Only If You Vote’ that constitutes democracy?”- PTR hits back at Fadnavis’s remarks.

Spread the love

தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாடு, மத்திய அரசுக்கு அதிக வரிப்பணத்தைச் செலுத்தி வருகின்றன. அவ்வாறு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை மீண்டும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு வழங்காமல், அதை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. தற்போதைய பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் வரிப்பணத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

மோடி, நயினார் நாகேந்திரன், டி.டி.வி.தினகரன்

மோடி, நயினார் நாகேந்திரன், டி.டி.வி.தினகரன்

இதற்கு சில உதாரணமாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட கல்விக்கான நிதியை ‘புதிய கல்விக் கொள்கையை’ ஏற்றால் தான் தருவோம் என்று நிபந்தனை விதிப்பது. சட்டப்படி வழங்கவேண்டிய நிதியை, மும்மொழி கொள்கை போன்ற அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணியின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.47,000 கோடி. இதில் 15% மாநில அரசு, 15% மத்திய அரசு, மீதமுள்ள 70% கடன் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டது. இதற்கான கடனை வழங்க பன்னாட்டு வங்கிகள் தயாராக இருந்தாலும், மத்திய அரசு தனது பங்கை வழங்காமல் இழுத்தடிப்பது திட்டத்தை பாதிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *