வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவித்ததும் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திட்டம்  | all-party meeting after announcing special intensive revision of voters list

Spread the love

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி குறித்த அறி​விப்பு எப்போது வேண்​டு​மா​னாலும் வெளியாக லாம் என்​ப​தால், தேவை​யான அனைத்து ஏற்​பாடு​களும் தயார் நிலை​யில் இருப்​ப​தாக தமிழக தேர்​தல் துறை​ கூறியுள்ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் எஸ்​ஐஆருக்​கான தேதி எப்​போது வேண்​டு​மா​னாலும் அறிவிக்​கப்​படலாம். அதற்காக தயார் நிலை​யில் உள்​ளோம். அறிவிக்​கப்​பட்​டதும் முதல்​கட்​ட​மாக தலைமை தேர்​தல் அதி​காரி, மாவட்ட மற்றும் வாக்​காளர் பதிவு அதி​காரி நிலை​யில் அனைத்​துக்​கட்சி கூட்​டங்​கள் நடத்​தப்​படும். வழக்​க​மான வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பணி​கள் போல் வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்பட மாட்​டாது. சிறப்பு முகாம்​களும் கிடை​யாது.

இதற்​கான புதிய வழி​காட்​டு​தலை ஆணை​யம் வெளியிடும். இந்த எஸ்​ஐஆரின்​போது இந்​தாண்டு ஜனவரி​யில் வெளி​யான இறுதி வாக்​காளர் பட்​டியல், 2002-03-ல் வெளி​யான வாக்​காளர் பட்​டியல் ஆகியவை அடிப்​படை​யில் பணி​கள் நடை​பெறும். 2002-03-க்​கான பட்​டியல் தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் உள்​ளது. தமிழகத்​தில் தற்​போது 68,467 வாக்​குச்​சாவடிகள் உள்​ளன. இனி 1,200 வாக்​காளருக்கு ஒரு வாக்​குச்​சாவடி அமைக்​கப்​படு​வ​தால், இதன் எண்​ணிக்கை 75,050 ஆக உயரும். எஸ்​ஐஆர் தொடங்​கப்​பட்​டதும், வீடு​வீ​டாகச் சென்று விண்​ணப்ப படிவங்​களை வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள்வழங்​கு​வார்​கள். இதற்​காக 90 ஆயிரம் பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​படு​கின்​றனர். படிவங்​களை பூர்த்தி செய்​து, அலு​வலர்​கள் மீண்​டும் வரும்​போது வழங்க வேண்​டும். விண்​ணப்ப படிவத்​துடன், இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்​கும் வகை​யில் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்ள 11 ஆவணங்​களில் ஏதேனும் ஒன்று மற்​றும் ஆதார் எண்ணை வழங்​கலாம்.

எஸ்​ஐஆரின்​போது, இறந்த வர் பெயர், ஒன்​றுக்​கும் மேற்பட்ட இடங்​களில் உள்ள பெயர்​கள் நீக்​கப்​படும். இப்​பணி​கள் டிசம்​பருக்​குள் முடிக்​கப்​பட்டு இறுதி வாக்​காளர் பட்​டியல் ஜனவரி​யில் வெளி​யாகும். வாக்​காளர் பட்​டியலில் பெயர் நீக்​கப்​பட்​டால் அதற்​கான நோட்​டீஸ் வழங்​கப்​படும். அப்​போது, ஆணை​யம் தெரிவிக்​கும் ஆதார ஆவணங்​களை சமர்ப்​பித்து மீண்​டும் பெயரை சேர்க்​கலாம்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *