வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான திமுகவின் மனு மீது நவ.11-ம் தேதி விசாரணை | Supreme Court To Hear DMK Petition Challenging SIR On November 11

Spread the love

புதுடெல்லி: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்தை ரத்து செய்​யக் கோரிய திமுக​வின் மனுவை உச்ச நீதி​மன்​றம் நவம்​பர் 11-ம் தேதி விசா​ரிக்​கிறது.

பிஹாரைத் தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்​ளது. இதற்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக வழக்கு தொடர்ந்​துள்​ளது.

திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர். எஸ்​.​பாரதி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் விவேக் சிங் தாக்​கல் செய்​துள்ள ரிட் மனு​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை அறி​வித்த இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் அக்​டோபர் 27-ம் தேதி​யிட்ட அறிக்கை அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை உரிமை​களை​யும், மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​தை​யும் மீறு​வ​தாக உள்​ளது. இந்த நடவடிக்​கையை ரத்து செய்​யா​விட்​டால், லட்​சக்​கணக்​கானோர் வாக்​குரிமையை இழக்க நேரிடும். நியாய​மான, நேர்​மை​யான தேர்​தல் நடத்​து​வது கேள்விக்கு உள்​ளாகும்.

தவிர, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்த நடவடிக்​கைக்​கான காரணங்​களை தேர்​தல் ஆணை​யம் அதன் அறி​விப்​பில் தெரிவிக்​க​வில்​லை. எனவே, தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை அறி​வித்த தேர்​தல் ஆணை​யத்​தின் அறிக்​கையை ரத்து செய்ய வேண்​டும்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் முன்பு வழக்​கறிஞர் விவேக் சிங் ஆஜராகி, இந்த வழக்கை விரைந்து விசா​ரிக்​கு​மாறு முறை​யிட்​டார். இதை ஏற்ற நீதிப​தி, திமுக​வின் மனுவை நவம்​பர் 11-ம் தேதி விசா​ரணைக்கு பட்​டியலிட உத்​தர​விட்​டார். பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை​யும் உச்ச நீதி​மன்​றம்​ 11-ம்​ தேதி மீண்​டும்​ வி​சா​ரி​க்​கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *