வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் பன்வேல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மேடையில் அவர் பேசியதாவது,
”ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்குவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கும் இலவச எரிவாயு உருளைகளை (கேஸ் சிலிண்டர் ) வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ரோஹிங்கியாக்களுக்கும் வங்கதேசத்தினருக்கும் இலவச எரிவாயு உருளை வழங்குவதாக காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியினர், நாட்டையும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எப்படி விளையாட்டாக பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.