வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழில்: புரோக்கர் கைது: பொதுமக்கள் அதிர்ச்சி  – Kumudam

Spread the love

விருகம்பாக்கம் சாலிகிராமம் எஸ்பிஐ காலனி 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆண்கள் பலர் வந்து செல்வதால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு -1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் எஸ்பிஐ காலணி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமான வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. 

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தனர். அப்போது, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்த பழைய பாலியல் புரோக்கர் சீனிவாசன்(55) என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து இருக்கிறார். 

தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு என தனியாக வாட்ஸ் அப் குழு உருவாக்கி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக சீனிவாசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். இல்லதரசிகள் வசிக்கும் பகுதியில் வீடு எடுத்து விபச்சார தொழில் செய்து வந்ததை தெரிந்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *