வாரக் கடைசியில் ஷாக் கொடுத்த தங்கம் : சவரன் ரூ.2,080 உயர்வு  – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் உச்சத்தை தொட்டு வந்தது. 1 லட்ச ரூபாயை தாண்டி தங்கம் சவரனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருந்தது. 

நேற்றைய மீண்டும் சவரனுக்கு ரூ.640 குறைந்து, தங்கம் ஒரு சவரன் ரூ.1,15,360 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,680-க்கு விற்னை ஆகிறது. 

வெள்ளியை பொறுத்தவரை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *